நாளை மீண்டும் போராட்டம் வெடிக்கும்: மகாநாயக்க தேரர்கள் எச்சரிக்கை-செய்திகளின் தொகுப்பு
ஆட்சியாளர்கள் உடனடியாக வெளியேறவிட்டால், 9ஆம் திகதி புயல் வந்தது, 13ஆம் திகதி சுனாமி வரப் போகிறது என்பதை தெளிவாக நினைவில் கொள்ளுங்கள் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
புறக்கோட்டையில் நடத்தப்பட்டு வரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களை சந்திப்பதற்காக வருகைத் தந்த போதே அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத தலைவர்களை மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட உலப்பனே சுமங்கல தேரர், மக்களை நிராகரித்த தலைவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இப்போது நிலைமை மாறி வருகிறது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,