ஈரானில் தொடரும் போராட்டம் – இதுவரை 65 பேர் பலி!
ஈரானில் தற்போதைய ஆட்சிக்கு எதிராக கடந்த வாரம் பொதுமக்கள் தொடங்கிய போராட்டம் தொடர்ந்து 13 ஆவது நாளாக நடைபெற்று வருகின்றது
180 நகரங்களில் 500க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பரவியுள்ள இந்த வன்முறை போராட்டங்களில் 15 பாதுகாப்புப் படையினர் உட்பட குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒன்பது குழந்தைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இணைய சேவைகள் முடக்கம்
2,300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கின்றனர்.
மேலும் நாடு முழுவதும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், அமெரிக்காவை மகிழ்விப்பதே போராட்டக்காரர்களின் குறிக்கோள் என்று நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஈரானில் ஸ்திரமின்மையை ஏற்படுத்த அமெரிக்காவின் நடவடிக்கைகளை நிராகரித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஈரான் ஒரு கடிதத்தையும் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |