சிவானந்த பாடசாலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் முரண்பட்ட ஆசிரியை வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் முரண்பட்ட ஆசிரியை ஒருவர் மயக்கமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை இடமாற்றக்கோரி பாடசாலையின் வாயிற்கதவுகள் மூடப்பட்டு இன்று காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையின் அபிவிருத்திக்குழு, பழைய மாணவர்கள், ஒருசில பெற்றோர் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பாடசாலைக்குள் செல்ல முயன்ற ஆசிரியை ஒருவருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்றப்பட்டதுடன், கருத்து முரண்பாடுகளும் எழுந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து முற்பகல் ஆசிரியர்கள் அச்சுறுத்தப்பட்டதாக சிவானந்தா தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றிணையும் முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ஆர்ப்பாட்டக்காரருடன் கருத்து முரண்பாடுபட்ட ஆசிரியை மயக்கமுற்ற நிலையில் வீட்டிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று காலை தான் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகக் குறித்த ஆசிரியை
போராட்டத்தின் போது தெரிவித்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
