லிபியாவில் தீவிரமடைந்த போராட்டம்! போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட நாடாளுமன்றம்
லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தாக்கி அதன் சில பகுதிகளுக்கு தீ மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தொடர் மின்வெட்டு மற்றும் கட்டுப்பாடற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இவ்வாறு போராட்டம் நடத்தப்படுகின்றது.
லிபியா மக்கள் டோப்ரூக் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு அதன் ஒரு பகுதிக்கு தீ மூட்டியுள்ளனர்.

உடனடியாக தேர்தலை நடத்துமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை
தற்போது லிபியா தலைநகர் திரிப்போலியிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த போராட்டங்களுக்கு லிபிய இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam