கொழும்பு போராட்டக் களத்தில் சிறுமி ஆயிஷாவிற்கு அஞ்சலி செலுத்திய போராட்டக்காரர்கள் (Video)
கொழும்பு - காலிமுகத்திடலில் இலங்கையின் அசாதாரண சூழ்நிலைக்கு காரணமான அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த ஏப்ரல் மாதம் 09ம் திகதியிலிருந்து பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப்போராட்டமானது இன்றுடன் 52வது நாளாகவும் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சிறுமிக்கு அஞ்சலி செலுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள்
இந்நிலையில் அட்டுலுகம பகுதியில் கடந்த 27ம் திகதி 09 வயதுடைய பாத்திமா ஆயிஷா எனும் சிறுமி ஒருவர் காணாமல்போன நிலையில் அவரது வீட்டிற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரியும் அஞ்சலி செலுத்தியும் இன்றையதினம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
இந்தப்போரட்டக்களத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் கலந்துகொண்டு சிறுமிக்காக அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.





வட்டியில்லா கடன்களை வழங்கும் PM Svanidhi Yojana திட்டம்.., வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி News Lankasri
