வலி. வடக்கு போராட்டத்தில் போராட்டக்காரர்களை மிரட்டிய பொலிஸார்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Sri Lanka Police SL Protest Sri Lanka Police Investigation
By Theepan May 17, 2026 06:12 PM GMT
Report

மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வலி. வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் பகுதிக்குள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளில் மயிலிட்டியில் உள்ள இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிடத்திற்கு (கொமோண்டோ பங்களா) முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்த வேளை திடீரென மழை பெய்தமையால், மழைக்கு ஒதுங்கி நிற்க பங்களாவின் எல்லை வேலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பாள் கட்டியுள்ளனர்.

அதனை அடுத்து கொட்டும் மழைக்குள்ளும் அவ்விடத்திற்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தரப்பாளை உடனே கழட்டுமாறும், இல்லை எனில் இதில் உள்ளவர்களை கைது செய்வேன் என மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 பேர் மாயம்.. தீவிர விசாரணையில் புலனாய்வாளர்கள்!

சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 பேர் மாயம்.. தீவிர விசாரணையில் புலனாய்வாளர்கள்!

முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம்.. 

அதனை அடுத்து அங்குள்ளவர்கள் அதனை காணொளி எடுக்க முற்பட்ட வேளை அவர்களுடன் தர்க்கம் புரிந்து விட்டு, அவ்விடத்தில் இருந்து திரும்பி சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.

வலி. வடக்கு போராட்டத்தில் போராட்டக்காரர்களை மிரட்டிய பொலிஸார்.. முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Protesters Been Threatend By Police Complaints

அது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கீரிமலை - பருத்தித்துறை வீதியில் கடற்கரை பக்கமாக உள்ள காணிகள் உயர் பாதுகாப்பு வலயமாகவோ, இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியாகவோ காணப்படவில்லை. ஆனாலும் அந்த காணிகளை மக்களிடம் இராணுவத்தினர் கையளிக்கவில்லை.

குறித்த பகுதியிலையே இராணுவ தளபதிகளுக்கான சொகுசு தங்குமிடமும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்கு என சுமார் ஒரு கிலோ மீற்றர் நீள கடற்கரை பகுதியை தம் வசம் வைத்துள்ளனர்.

அத்துடன் பலாலி பகுதியில், சந்தை கட்டட தொகுதி பொதுமக்கள் பாவனைக்காக விடப்பட்டு இருந்தாலும், அப்பகுதியில் இராணுவத்தினரின் வீதியோர உணவகங்களே காணப்படுகிறது. அப்பகுதியில் தனியார் வியாபாரம் செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது.

அதேபோன்றே குறித்த கடற்கரை பகுதியில் இருந்து முன்னர் கடற்றொழில் நடவடிக்கைக்கு சென்றவர்கள், தற்போது அப்பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை.

குறித்த பகுதியில் உள்ள காணிகளை இன்னமும் மக்களிடம் மீள கையளிக்காது, இராணுவத்தினர் தமது பயன்பாட்டிற்காக வைத்துள்ளார்கள் பாதுகாப்பு காரணங்கள் இன்றி, தமது உல்லாச வாழ்வுக்காக தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து வாழும் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி எமது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும். எமது வாழ்வாதாரங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கீரிமலை - பருத்தித்துறை வீதியில் கடற்கரை பக்கமான காணிகளை ஓரிரு மாதங்களில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடந்த 03ஆம் திகதி யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அநுர அரசில் அதிகரிக்கும் ஊழல் அதிகாரிகள் : இலங்கை போக்குவரத்து சபை தலைவர் மீதான குற்றச்சாட்டு..!

அநுர அரசில் அதிகரிக்கும் ஊழல் அதிகாரிகள் : இலங்கை போக்குவரத்து சபை தலைவர் மீதான குற்றச்சாட்டு..!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US