போராட்டகார்களுக்கும் அரசாங்கத்தில் பங்கு வேண்டும்: இல்லையேல் போராட்டம் வெடிக்கும் - லஹிரு வீரசேகர
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்காக ஜூலை 9 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டு விட்டது என காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் சார்பில் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
பதவி விலகுவதற்கான காலம் வழங்கப்பட்ட நிலையில், பதவியில் இருந்து விலகுவதற்கு ஏன் 13 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கம் தேவையில்லை-வேறு ஒருவரை நாற்காலியில் அமர வைத்து வேடிக்கை பார்க்க போராடவில்லை
சர்வக்கட்சி அரசாங்கம் எதுவும் தேவையில்லை என்பதை ஏனைய அரசியல்வாதிகளுக்கு கூறி வைக்கவிரும்புகிறோம். மற்றுமொருவரை நாற்காலியில் அமர வைத்து வேடிக்கை பார்ப்பதற்காக போராட்டத்தை நடத்தவில்லை.
அடுத்து ஆட்சிக்கு வரும் எந்த ஆட்சியாளராக இருந்தாலும் அரசாங்கமாக இருந்தாலும் மக்கள் போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அங்கம் வகிக்காத அரசாங்கமாக இருந்தால், போராட்ட அலை மூலம் பதில் வழங்க தயாராக இருப்பதாகவும் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.
லஹிரு வீரசேகர, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்பதுடன் முன்னனிலை சோசலிசக் கட்சியின் செயற்பட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.