காணொளியை பயன்படுத்தி ஆர்ப்பாட்டகார்களை கைது செய்யும் பொலிஸார்
கடந்த 9 ஆம் திகதி நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பொலிஸார்,காணொளி காட்சிகளை பயன்படுத்தி அமைதியான முறையில் எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தவர்களையும் கைது செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை சவாலுக்கு உட்படுத்தும் செயல்
மே 9 ஆம் திகதி வன்முறைகளை தூண்டியவர்கள் அல்லது அதற்கு பங்களிப்பை வழங்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காத பின்னணியிலும் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை கூட கவனத்தில் கொள்ளாது செயற்பட்டு வரும் தருணத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வது சட்டத்தின் ஆட்சியை சவாலுக்கு உட்படுத்தும் செயல் என ரஞ்சித் மத்தும பண்டார தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேரடியாக வன்முறை செயல்களுக்கு பங்களிப்பை வழங்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தாலும் சம்பவங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர், பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் உடனடியான பதிலை எதிர்பார்த்துள்ளதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

May you like this Video
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam