கொழும்பில் சட்டத்தரணிகள் மகா சபையால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் (live)
''நீதியரசர்கள் மீது கை வைக்காதே'' எனும் தொனிப்பொருளின் கொழும்பு - புதியக்கடை நீதிமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (24.04.2023) சட்டத்தரணிகள் மகா சபையால் முன்னெடுக்கப்படுகின்றது.
இதற்கமைய நீதிபதிகள் வழங்கிய கட்டளையொன்றுக்காக அவர்களை நாடாளுமன்ற குழு முன்பாக அழைப்பது நீதித்துறையின் சுதந்திரத்தை மீறுகின்ற செயலாகும்.
அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளுக்கும் சுதந்திரம் கிட்டவிட்டால் மக்களுக்கு நீதியை வழங்க முடியாது.
அரசாங்கத்தின் இந்த செயலுக்கு எதிராகவே சட்டத்தரணிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணி ஒருவர் கருத்து வளங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




