சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் ஆதரவு
வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் (08.11) சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய மட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் மற்றும் பணிக்கு அமர்த்தப்பட்ட பட்டதாரிகள் சங்கம் என்பவற்றால் 08.11.2021 திங்கள் கிழமை இன்று முன்னெடுக்கப்படவிருக்கும் ஒரு நாள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகதர்தர் சங்கமாகிய நாமும் எமது பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றோம்.
நியாயமான முறையில் எமது உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய அல்லது தீர்த்து வைக்கப்பட வேண்டிய சம்பள முரண்பாடுகள், பதவி உயர்வுகள், திறமை அடிப்படையிலான கடமைகள், பயணப்படி போன்ற விடயங்களை முன்னுறுத்தி மேற்கொள்ளப்படும் குறித்த சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு வடமாகாணத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகர்தர்களாகிய நாமும் எமது பூரண ஆதரவைத் தெரிவித்து திங்கள் கிழமை சுகயீனத்தை தெரிவித்து விடுமுறை பெற்று ஒத்துழைப்பு நல்குவோம்.
குறித்த தினத்தில்(இன்று) நாம் அனைவரும் ஒன்று பட்டு நம் திணைக்களத் தலைவர்களுக்கு நம் விடுமுறையை அறிவித்து விடுமுறையைப் பெற்று ஒத்துழைப்போம். அதன் மூலம் எமது உரிமையைக் வென்றெடுப்போம் என்று அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
