தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி நான்காம் நாள் போராட்டம் (Photos)
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி தமிழ் தேசிய
மக்கள் முன்னணியினரால் 3 வது கட்டமாக நடாத்தாப்படும் போராட்டத்தின் நான்காம்
நாள் போராட்டம் இன்று (03.06.2023) இடம்பெற்று வருகின்றது.
இதன்போது யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜெந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஊடக பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொலிஸார் மிரட்டல்
இதில் அகற்று அகற்று சட்டவிரோத விகாரையை அகற்று, வடமக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், சட்டவிரோத விகாரைக்கு பொலிஸார் பாதுகாப்பா, இராணுவமே வெளியேறு, உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் வீதிகளின் ஒரங்களில் நிழலிற்காக தங்கியிருந்த போராட்டக்காரர்களை பொலிஸார் மிரட்டியதுடன் அரச ஊடகங்கள் தவிர்ந்தவர்கள் செய்தி சேகரிக்க முடியாது என்றும் மிரட்டியுள்ளனர்.
எனினும் ஊடகவியலாளர்கள் அவர்களது அறிவுறுத்தல்களுக்கு செவிமடுக்காது செய்தி சேகரிப்பில் ஈடிபட்டு கொண்டிருந்துள்ளனர்.
குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
போராட்டம் தொடர்ச்சியாக இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் பேருந்து ஒன்றில் வருகை தந்த சிங்கள மக்கள் விகாரைக்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளனர்.
இந்நிலையில் போராட்டம் இரவு 8:00 மணியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
