13வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டுக்கோட்டையில் வாகனப்பேரணி! (Photos)
13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் வாகனப்பேரணி ஒன்று வட்டுக்கோட்டையில் தமிழ் தேசியமக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்திற்கு முன்னால் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணியானது வட்டுக்கோட்டை தொகுதி முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பேரணியை முன்னெடுத்தவர்களால் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
பிரேத பெட்டியினை தாங்கியவாறு முன்னெடுக்கப்பட்ட பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரான கனகரத்தினம் சுகாஷ், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள் அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.