யாழில் போதைவஸ்து பாவனைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் (Video)
யாழ். சங்கானை பேருந்து நிலையத்திற்கு அருகில் போதைவஸ்து பாவனைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைவஸ்தினை ஒழிக்குமாறு கோரியே இன்று(21) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
"பன்னாட்டு புகையிலை நிறுவனத்தின் வரி மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களை அம்பலப்படுத்துங்கள்", "யாழில் தடை செய்யப்பட்ட போதை ஊசி மருந்து பாவனைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடு", "மது நிறுவனங்களுக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை விற்காதே" போன்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைவஸ்து பாவனைக்கு எதிராக போராட்டம்
இப்போராட்டத்தில் சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தினர், வலிமேற்கு பிரதேச
சபையினர் மற்றும் இளைஞர் யுவதிகள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.