வலிகாமம் மேற்கில் வீதிகளை புனரமைத்து தருமாறு கோரி போராட்டம் (video)
வலிகாமம் மேற்கில் காணப்படுகின்ற பிரதான மூன்று வீதிகளை புனரமைத்து தருமாறு கோரி வலிகாமம் மேற்கு பிரதேச பொதுமக்கள் இணைந்து மூளாய் பிரதான வீதியை முடக்கி இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வலி.மேற்கு மக்களுக்கு வசந்தம் இல்லையா? ஏசி அறையில் இருந்து வெளியே வாருங்கள்! 782,784,786 வீதிகளால் பயணிக்கும் மக்கள் வலிகளுடன் செல்வதா! RDA அதிகாரிகளே உங்கள் அசந்தமே எங்கள் அவலங்கள் இனியாவது திரும்பிப் பாருங்கள்! யாழ்- மானிப்பாய் -காரைநகர் ,மாவடி- மூளாய் -வட்டுக்கோட்டை பொன்னாலை வீதிகளை உடன் புனரமையுங்கள்! இவ்வாறு பதாகைகளை ஏந்தியவாறு கோஷத்தை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீதிகளை புனரமைத்து தருமாறு போராட்டம்
இதனையடுத்து பிரதேசவாசிகள் சங்கானைப் பிரதேச செயலகத்திற்கு விரைந்ததுடன், பிரதேச செயலரை சந்தித்து மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் வலிமைக்கு
பிரதேச சபையின் உபதவிசாளர் சச்சிதானந்தன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின்
உறுப்பினர்களான பொன்ராசா,இலங்கேஸ்வரன், சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள்,
பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




