நுவரெலியாவில் pickme- க்கு எதிராக போராட்டம்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் அமைக்கவுள்ள Pick Me அலுவலகத்திற்கு எதிராக நுவரெலியா சாரதி சங்கத்தினர் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டமானது, இன்று(09.01.2026) நுவரெலியாவில் அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்ட சாரதிகள் கருத்து தெரிவிக்கையில்,
Pick Me செயலியை நிரந்தரமாக அறிமுகம் செய்தால் சுற்றுலா பயணிகளும் மற்றும் பொது மக்களும் அதனை பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். இதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கர வண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் வாழ்வாதாரமாக கொண்டு ஏற்படுபவர்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படக்கூடும்.

மேலும், நுவரெலியா சுற்றுலாவிற்கு ஒரு பிரதான தளமாகும். இங்கே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களிடம் Pick Me செயலி மூலம் இரகசியமான முறையில் பணம் பரிமாற்றம் செய்து ஏற்றி செல்கின்றனர்.
அத்துடன் கூடிய தூரத்திற்கு, குறைந்தளவு பணத்தை வாங்கிக் கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். இது போன்று செய்தால் காலை முதல் இரவு வரை இந்த தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

Pick Me-ஐ நம்பி எங்களால் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாது. நுவரெலியா நகரில் அறிமுகம் செய்யவும் இடமளிக்க முடியாது. இதுவே எங்களது கோரிக்கையாகும்” என போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில் புதிய அலுவலகம் அமைப்பதற்கு தீர்மானம் செய்த இடத்தில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan