ஊடகவியலாளர் இராமசந்திரனுக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
ஊடகவியலாளர் சு. இராமசந்திரனுக்கு நீதி கோரி யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இன்று (காலை 9.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வடமராட்சி - கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டு 19 ஆண்டுகள் கடந்துள்ளன.
அரச ஊழியர்களின் இடத்திற்கு களமிறக்கப்படும் ஆயுதப்படை..! இரகசிய நகர்விற்கு எதிராக தயாராகும் அதிரடி நடவடிக்கை
காணாமல் ஆக்கப்பட்டமை..
ஊடக செயற்பாட்டின் பின்னர் வீடு திரும்பிய போது துன்னாலை கலிகை சந்தியில் அமைந்திருந்த இராணுவ முகாமில் வைத்து கடந்த 15.02.2007 அன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

19 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இராமச்சந்திரன் உயிருரோடு இருக்கின்றாரா இல்லையா என்பது தெரியாதுள்ளது.
ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam