கிண்ணியாவில்மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Trincomalee Eastern Province
By Kiyas Shafe Feb 18, 2026 12:52 PM GMT
Report

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கக் கோரி, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டமானது இன்று (18.2.2026) காலை கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த இந்தப் போராட்டத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு தமக்கான நீதியைக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

கொழும்பில் ஐவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு! பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

கொழும்பில் ஐவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு! பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை


நஷ்டஈடு

கடந்த டித்வா புயல் அனர்த்தத்தின் போது ஈச்சந்தீவு கிராமத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் கல்வி ரீதியாகவும் வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான நஷ்டஈடு அல்லது விசேட கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ​

கிண்ணியாவில்மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் | Payment Of Allowance For Affected Students Protest

இது குறித்து போராட்டக்காரர்கள் தெரிவிக்கையில், ​"எமது மாணவர்களுக்கான கொடுப்பனவு ஏன் இன்னும் வழங்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை விளக்குமாறு கோரி கடந்த டிசம்பர் 31ஆம் திகதி கிண்ணியா பிரதேச செயலாளருக்குக் கடிதம் ஒன்றை வழங்கியிருந்தோம்.

ஆனால், இதுவரை அவரிடமிருந்து எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை." பிரதேச செயலகத்தில் தீர்வு கிடைக்காத நிலையில், இம் மக்கள் திருகோணமலை மாவட்டச் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

வட மாகாணத்தில் போக்குவரத்து நடவடிக்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த திட்டம்

வட மாகாணத்தில் போக்குவரத்து நடவடிக்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த திட்டம்

கோரிக்கைகள்

அங்கிருந்து அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், பெப்ரவரி மாதம் 11ஆம் திகதிக்குள் இதற்கான தீர்வு பெற்றுத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

கிண்ணியாவில்மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் | Payment Of Allowance For Affected Students Protest

எனினும், குறிப்பிட்ட திகதி கடந்தும் கிண்ணியா பிரதேச செயலகம் இது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதேச செயலாளரிடம் கையளித்த மக்கள், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது, உடனடியாகத் தமக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்தனர்.

உடன் வைத்திய உதவியை நாடவும் - பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

உடன் வைத்திய உதவியை நாடவும் - பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US