தேர்தல் நடத்தப்படுமா..! கொழும்பில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட பதில் (Live)
கொழும்பு - இராஜகிரிய பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய முக்கியஸ்தர்கள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்குள் சென்றிருந்தனர்.
இந்த நிலையில் தேர்தல் தொடர்பில் நாளைய தினம் நீதிமன்றம் வழங்கப்போகும் முடிவின் அடிப்படையிலேயே தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவில் தமக்கு பதில் வழங்கப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியில் வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பு - இராஜகிரிய பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய முக்கியஸ்தர்கள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்குள் சென்றுள்ளனர்.
தேர்தலை நடத்தக்கோரிய கோரிய அடங்கிய கடிதத்தை சமர்ப்பிக்கும் நோக்கில் அவர்கள் உள்ளே சென்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வெளியே போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தேர்தலை நடத்தக் கோரி இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கை மக்களுக்கு அழைப்பொன்றை விடுத்துள்ளனர்.
அதன்படி தமது உரிமைகளை மீட்டெடுக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.



சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam