கல்வி அமைச்சுக்கு முன் ஏற்பட்ட பதற்ற நிலை! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று கல்வி அமைச்சுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
4 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்து வருவதால் தம்மை ஆசிரியர்களாக நியமிக்குமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்று (2) இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றது.
பதற்ற நிலை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சங்க உறுப்பினர்களை கலைக்க பொலிஸார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்றைய உலக ஒழுங்கை டொனால்ட் ட்ரம்பால் மாற்ற முடியுமா..! 38 நிமிடங்கள் முன்
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri