பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து முல்லைத்தீவில் போராட்டத்திற்கு அழைப்பு

Sri Lanka Police Missing Persons Mullaitivu Sri Lanka Sri Lanka Government
By Keethan Jan 06, 2024 11:10 AM GMT
Report

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவியினை பொலிஸார் கைது செய்துள்ளமையினை கண்டித்து பாரிய ஒரு போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்று (06.01.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வெளிநாடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை வி்டுவிக்க தீர்மானம்

வெளிநாடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை வி்டுவிக்க தீர்மானம்

எதிர்ப்பு நடவடிக்கை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எதிர்வரும் திங்கட்கிழமை(08) முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றினை நடாத்தவுள்ளோம்.

இந்த கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரும்  கலந்து கொண்டு எங்களுக்கான முடிவுகளை எடுக்கவேண்டும்.

பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து முல்லைத்தீவில் போராட்டத்திற்கு அழைப்பு | Protest Mullai Against Police Brutality Vavuniya

 பல நெருக்கடிக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இல்லாமல் செய்வதற்காக பல வழிகளில் முனைகின்றார்கள்.

இதனை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் எங்களுக்கான முடிவுகளை நாங்கள் எடுக்கவேண்டும்.

புலனாய்வுத்துறையின் அச்சுறுத்தல்கள்

இதற்காக நாங்கள் ஒன்று கூடுவதற்கு இடங்கள் கேட்டால் புலனாய்வுத்துறைகளால் இடம் கொடுக்காதீர்கள், சாப்பாடு கொடுக்காதீர்கள் என்று அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

இந்த நிலையில் நாங்கள் யாரிடமும் இடம் கேட்க போகாமல் நாங்களே முடிவெடுத்து எங்களுக்கான இடத்தினை நாங்கள் தெரிவு செய்துள்ளோம்.

பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து முல்லைத்தீவில் போராட்டத்திற்கு அழைப்பு | Protest Mullai Against Police Brutality Vavuniya

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவரின் முன்னால் தான் எங்கள் உறவுளை நாங்கள் கொடுத்தோம்.

அம்மாள் ஆச்சியின் சாட்சியாக நாங்கள் அந்த இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றினை கூட உள்ளோம். இதில் அனைவரும் ஒன்று சேரவேண்டும்.

பாரிய ஒரு போராட்டம்

எதிர்வரும் திங்கட்கிழமை (08.01.2024) காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய ஒரு போராட்டத்தினையும் முன்னெடுக்கவுள்ளோம்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவியினை பொலிஸார் கைது செய்துள்ளமையினை கண்டித்தும் பொலிஸாரின் அடாவடித்தனத்தினை கண்டித்தும் இந்த போராட்டத்தினை நடத்தவுள்ளோம்.

பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து முல்லைத்தீவில் போராட்டத்திற்கு அழைப்பு | Protest Mullai Against Police Brutality Vavuniya

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பொலிஸார் அடக்குவதையும் நிறுத்தவேண்டும் என்றும் இந்த போராட்டம் முன்னெடுக்கவுள்ளோம்.

இதில் தேசியத்திற்காக பயணிப்பவர்கள், அரசியல் பிரதிநிதிகள், அமைப்புக்கள் என அனைவரும் அணிதிரள வேண்டும்” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு

அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு

வெளிநாடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை வி்டுவிக்க தீர்மானம்

வெளிநாடொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை வி்டுவிக்க தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US