அல்லைப்பிட்டி சிறுவனின் படுகொலை: போராட்டத்தில் மயங்கி விழுந்த தாயார்!
புதிய இணைப்பு
போராட்டத்தில் கலந்து கொண்ட குறித்த சிறுவனின் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த சிறுவனின் மாமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாகவும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனான் அயூப்ராஜ் அருள்பாயஸ்ஸூக்கு நீதி கேட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் இன்று(22.02.2026) யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் கடந்த 10ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு நீதி கேட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் உயிரிழப்பிற்கு நீதி வேண்டும்..
மனித உரிமைகள் ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வேலன் சுவாமிகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், கொலை செய்யப்பட்ட சிறுவனின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு, "கொலைகார பொலிஸாராரை கைது செய், நீதி வேண்டும், பொலிஸாரிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை அச்சுறுத்தாதே, பொலிஸ் அராஜகம் ஒழிக" கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்திற்காக அதிகளவான பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.







வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam