திருகோணமலையில் சொந்த காணிகளை பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்!
திருகோணமலை மாவட்டம், கோமரங்கடவெல பிரதேச செயலகத்துக்கு முன்பாக, காணி சுவீகரிப்பதை நிறுத்தி, சொந்த காணிகளை பெற்றுத்தருமாறு இன்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
யுத்த காலத்தின் போது, தங்களது விவசாய காணிகளை இழந்த நிலையில், தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அதனை சுவீகரித்துள்ளதாக தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை

"இதனை தடுத்தி நிறுத்தி, சொந்த காணிகளை பெற்றுத்தாருங்கள். இதன் ஊடாக விவசாய செய்கையை மேற்கொள்ளவுள்ளோம்" என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, காணியை இழந்த கோமரங்கடவெல பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
வனஜீவராசி திணைக்களத்தினர் பயிர் செய்கைகளை செய்ய விடாதும், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடாத வண்ணமும் தடுத்துள்ளனர்.
இதனால் அன்றாட ஜீவனோபாய தொழிலான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் டி.எம்.எஸ்.திசாநாயக்க கலந்துரையாடி, தீர்வினை பெற்றுத் தருவதாக கூறிய பின்னர் அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri