பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் இன்று போராட்டம்
பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தாதிய அதிகாரிகளின் ஒன்றியத்தின் தலைவர் சமன் ரட்னப்பிரிய (Saman Rathnapriya) இந்த போராட்டம் குறித்து அறிவித்துள்ளார்.
ரயில்வே, தபால், சுகாதாரம், நிர்வாக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்கள் இவ்வாறு போராட்டத்தில் குதிக்க உள்ளன.
கௌரவமான சேவை, 10000 ரூபா சம்பள அதிகரிப்பு, ஓய்வு வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தல் போன்ற சில கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களும் பங்கேற்பார்கள் என சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளத் தவறினால் போராட்டங்கள் கடுமையாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
