இலங்கையில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 இந்திய கடற்றொழிலாளர்களையும் படகுடன் விடுதலை செய்யுமாறு கோரி இராமேஸ்வரத்தில் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
32 கடற்றொழிலாளர்கள்
இராமேஸ்வர விசைப்படகு கடற்றொழிலாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக நேற்று (25.02.2025) நடந்த கடற்றொழிலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் துறைமுகங்களில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று எல்லை தாண்டி தொழிலில் ஈடுபட்டதாக 32 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 32 இந்திய கடற்றொழிலாளர்களையும் படகுடன் விடுதலை செய்யுமாறு கோரி இராமேஸ்வரத்தில் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலதிக தகவல் - ஆஸிக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




