வீதியை புனரமைத்து தருமாறு கோரி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்
புத்தளம் (Puttalam) மணல்குன்றிலிருந்து செம்மாந்தழுவ செல்லும் சுமார் 5 கிலோமீற்றர் வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்றையதினம் (10.06.2024) செம்மாந்தழுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வாகனங்களை வீதியில் நிறுத்தி வீதியை மறைத்து பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
பிரச்சனைக்கான தீர்வு
அத்துடன், குறித்த வீதியினூடாக குப்பைகளை ஏற்றிச் செல்லும் புத்தளம் நகரசபை உழவு இயந்திரங்களும் வீதியினூடாக செல்லமுடியாமல் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, குறித்த சம்பவ இடத்திற்கு புத்தளம் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி
எச்.பி .என் குலதுங்க வருகைத் தந்ததையடுத்து, போராட்டக்காரர்கள் அவரிடம் குறித்த வீதி தொடர்பான முறைப்பாட்டினை முன்வைத்துள்ளனர்.
இதன்போது, குறித்த பிரச்சனை தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பிரச்சனைக்கான தீர்வினைப் பெற்றுத் தருவதாக எச்.பி. என் குலதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |