“எமது பிள்ளைகள் கல்லா? மண்ணா?” கோஷங்களுடன் கொட்டும் மழையில் போராட்டம்
வடக்கில் பல இடங்களில் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த போராட்டமாது கொட்டும் மழையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்பாணம்
“இறுதி யுத்தத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது, சர்வதேசமே பதில் சொல்” என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்துக்கு முன் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை, சர்வதேசமே எமக்கு தீர்வை கொடு போன்ற கோஷங்களை எழுப்பியவாறு கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளானர்.
மேலும் எங்களது பிள்ளைகளை கையளிக்கும் போது நீங்கள் தான் பாதுகாப்பு செயலாளராக இருந்தீர்கள். உங்கள் பேரப்பிள்ளைகளை தூக்கிவிட்டு மெய்சிலிர்க்கிறது என்று கூறினீர்கள். எங்கள் பிள்ளைகள் என்ன கல்லா மண்ணா? எங்களது பிள்ளைகள் என்ன பிள்ளைகள் இல்லையா எனவும் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த போராட்டத்தின் போது அப்பகுதியில் புலனாய்வுத்துறையாளர்கள் இருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நடத்தப்படும் போராட்டங்களில் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் காணப்படுவதாக யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் பறிகொடுத்த எமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரியே போராட்டங்களை மேற்கொள்கின்றோம். ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம்.
அவ்வாறு போராட்டத்தினை மேற்கொள்ளும் போது அந்த இடத்தில் புலனாய்வாளர்கள் குவிக்கப்படுகின்றனர். அவர்கள் எம்மை படமெடுக்கிறார்கள் வீடியோ எடுக்கிறார்கள். அச்சுறுத்தும் பாணியில் செயற்படுகிறார்கள். ஏன் அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவ்ரகளின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.
இறுதி யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி 1711வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வவுனியா
வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, எங்கே எங்கே உறவுகள் எங்கே, கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே போன்ற கோசங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பியிருந்ததோடு, உங்கள் இராணுவத்தின் உறுதி மொழியை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள், தமிழ் குழந்தைகள் என்ன பயங்கரவாதிகளா, ஐந்து வயது குழந்தையும் ஆயுதம் ஏந்தியதா போன்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,
சுர்வதேச குற்றவியல் நீதிமன்றின் மூலமே எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கொண்டு இருக்கிறோம், எமக்கு சர்வதேசமே பதில் வழங்க வேண்டும்.
நாங்கள் ஒவ்வொரு மாதமும் வந்து ஒரு தெருக்கூத்து போடுவது போல் எண்ணலாம். ஆனால் நாங்கள் எங்கள் பிள்ளைகள், கணவன்மார், என பலரை கொடுத்து விட்டு வேதனைக்கு மத்தியிலேயே இவ்வார்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றோம்.
நாங்கள் கடந்த 12 வருடமாக வேதனையுடனும் கவலையுடனும்தான் இருக்கிறோம் என தெரிவித்தனர்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
