இந்திய இழுவை படகுகளை தடை செய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம் (Photos)

Indian fishermen Mullaitivu Sri Lanka Fisherman
By Keethan Nov 24, 2023 10:30 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்புக்களும் யாழ்பாண கிராமிய கடற்தொழில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்திய இழுவைப்படகுகளை தடை செய்யகோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(24.11.2023)முல்லைத்தீவு மாவட்ட செயலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது அவர்கள் இந்தியன் இழுவைமடிப்படகின் எல்லை தாண்டிய சட்டவிரோத கடற்தொழிலைத் தடுப்பதற்கான மனுவொன்றை மாவட்ட செயலாளரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைகளின் டிசம்பர் மாத விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாடசாலைகளின் டிசம்பர் மாத விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

சட்டவிரோத கடற்தொழில்

மேலும் அந்த மனுவில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளதாவது,

“முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களாகிய நாம் கடந்த பத்து வருடங்களாக இந்திய இழுவைமடிப்படகு கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத கடற்தொழில் தொடர்பாக கடற்தொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா ஐயாவிற்கும் தங்களுக்கும் பல தடவைகள் நேரடியாகவும் எழுத்து மூலமும் தரப்பட்ட மனுக்களுக்கு  அமைச்சரதும் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை என்பதனைத் தங்களுக்கு இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்திய இழுவை படகுகளை தடை செய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம் (Photos) | Protest In Mullaithivi

இந்தியன் இழுவைமடிப் படகுகளின் எல்லைதாண்டிய சட்டவிரோத கடற்தொழிலை மேற்கொள்வதால்: எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிப்படைந்த நிலையில் வாழ்வா சாவா எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எமது கடல்வளமான மீன் பெருக்கத்திற்கு உதவும் பவளக்கொடிகள் மற்றும் பிற கடல்வளங்களும் அழிவடைந்த நிலையில் உள்ளது. எமது எதிர்காலச் சந்ததியினரை ஒழிப்பதற்காக பெருமளவான கேரளக் கஞ்சா போன்ற உயிரைக்கொல்லும் சட்டவிரோத போதைவஸ்து வகைகளையும் இங்கே அவர்கள் கொண்டுவந்து எமது சந்ததியினரை அழிக்கின்ற தீயசெயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.

மனு கையளிப்பு

மேலே குறிப்பிடப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகள் தொடருமானால் நாம் எமது கடலையும் கடல் வளத்தினையும் மற்றும் வாழ்வாதாரத்தினையும் இழந்து யாருமற்ற ஏதிலிகளாக வாழ்ந்து சாவதைவிட எமக்கு வேறு வழியில்லை.

ஆகவே இனியும் தாங்கள் தாமதிக்காது இச்சட்டவிரோத செயற்பாடுகளை உடன் தடுத்து நிறுத்துவதற்கு பொருத்தமானவர்களுக்கு கட்டளையிடும்படியும், நாம் தங்களிடம் கேட்டுக்கொள்வதற்கு தங்களுக்கு தார்மீகப் பொறுப்பு உண்டென்பதையும் இங்கே தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்”என குறிப்பிட்டுள்ளது.

இந்திய இழுவை படகுகளை தடை செய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம் (Photos) | Protest In Mullaithivi

இந்நிலையில் மனுவின் பிரதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் பணிப்பாளர் நாயகம், கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம்,கொழும்பு- இந்தியத் தூதரகம், யாழ்ப்பாணம் கடற்படைக் கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண கடற்படைக் கட்டளைத் தளபதி, கிழக்கு மாகாண மாவட்டச்செயலாளர், கச்சேரி முல்லைத்தீவு ,கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் - முல்லைத்தீவு மாவட்டம் ஆகியோருக்கான மனுக்கள் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்ரன் அவர்களிடமும் மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் அவர்களிடத்திலும் இதன்போது கையளிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் போத்தல்களில் அடைக்கப்பட்ட பழவகைச்சாற்றில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற இரசாயனம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

மட்டக்களப்பில் போத்தல்களில் அடைக்கப்பட்ட பழவகைச்சாற்றில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற இரசாயனம்: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

அறிமுகமாகும் புதிய முறைமை: தொடருந்து பயணிகளுக்கான தகவல்

அறிமுகமாகும் புதிய முறைமை: தொடருந்து பயணிகளுக்கான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US