திருகோணமலையில் படகு கவிழ்ந்து ஆறு பேர் பலியான விவகாரம்! ஒன்று குவிந்த மக்கள் - கிண்ணியாவில் பரபரப்பு (Video)
திருகோணமலை - கிண்ணியா பள்ளிவாசலுக்கு முன்பாக தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை கிண்ணியாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிவாசலுக்கு முன்பாக கூடிய மக்கள் கடும் எதிர்ப்பினை முன்வைத்து வருவதோடு குறித்த பகுதயில் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது.
தமக்கான போக்குவத்து வசதிகள் இல்லாமை மற்றும் தம்மை அரசியல் தலைமைகள் கண்டுகொள்ளாமை போன்ற காரணங்களை முன்வைத்து மக்கள் இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கிண்ணியா மக்கள் பிரதான வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருகோணமலை கிண்ணியா பகுதியில் குறிஞ்சாங்கேணி பகுதியில் பாலம் அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதால் மக்களுக்கான போக்குவரத்துக்காக குறித்த ஆற்றினை கடப்பதற்கு இழுவவை படகினை பயன்படுத்தி வந்துள்ளனர்.
தினமும் இந்த இழுவைபடகின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டுவந்த நிலையில் இன்று காலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த இடத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரின் தொலைபேசி பறிக்கப்பட்டுள்ளதுடன், அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்..
திருகோணமலையில் இன்று காலை ஏற்பட்ட துயரம்! உயிரிழந்தோர் விபரம் வெளியானது (Video)







உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 10 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
