வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டங்கள் (Photos)
வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சர்வதேச நீதி கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று (30.06.2023) வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நீதி வேண்டி கவனயீர்ப்பு
போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, ஊடக சுதந்திரத்தை காப்பாற்று, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும், சர்வதேச விசாரணை வேண்டும்' என்ற கோசங்களை எழுப்பியவாறும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது தமக்கு நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் எனவும் போராட்த்தில் ஈடுபட்ட தாய்மார் குறிப்பிட்டனர்.
செய்திகள்: வசந்தரூபன்
முதலாம் இணைப்பு
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள அவர்களது அலுவலகம் முன்பாக இன்று (30.06.2023) 2383 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
தொடர் போராட்டம்
காணாமல் போயுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து தீர்க்கமான முடிவொன்றை வழங்குமாறும் வலியுறுத்தி காணாமல் போனோரின் உறவினர்கள் உறுதியான கொள்கையுடன் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



