கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தியை முன்னெடுக்க கோரி போராட்டம்(Photos)
கிளிநொச்சி வட்டக்கச்சி விநாயகர் வீதியை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு இன்று(22.02.2023) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக கூடிய மக்கள், கவனயீர்ப்பில் ஈடுபட்டு மாவட்ட செயலக வளாகம் வரை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வீதியை அபிவிருத்தி செய்ய சிலர் இடையூறு
கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சிறிமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, குறித்த வீதியை
அபிவிருத்தி செய்வதற்கு ஒரு சிலர் இடையூறு விளைவிப்பதாகவும், அதனால்
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், மாணவர்கள் என பலரும் பல்வேறு
பிரச்சினைகளிற்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் அரசாங்க அதிபருக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கேட்டறிந்த மேலதிக அரசாங்க அதிபர், அதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும், மாவட்ட அரசாங்க அதிபர் இல்லாமையால் அவரை சந்திக்க முடியாது எனவும் குறிப்பிட்டதுடன், அரசாங்க அதிபர் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை முன்னெடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது பிரதேச மக்களும், முன்னைய நாள் பிரதேச சபை உறுப்பினர்களான
மு.சிவமோகன் மற்றும் ஜீவராஜ் ஆகியோர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் 23 மணி நேரம் முன்

போலீஸ் ஸ்டேஷனில் கதிர்.. என்ன செய்ய போகிறார் மூர்த்தி, பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த வாரம் ப்ரோமோ Cineulagam

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam

குடும்பத்துடன் குதூகளிக்கும் கோபி...! ராதிகா பேரைக் கேட்டு அலறி அடித்து ஓட்டம்! சூடு பிடிக்கும் காட்சி Manithan

மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri
