சட்டத்தரணி சுவஸ்திகா விவகாரம்: யாழ்.பல்கலையில் ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக திரண்ட மாணவர்கள் (Video)
புதிய இணைப்பு
மாணவர்களின் போராட்டத்தை அடுத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக
வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள்
பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி இன்று(09.11.2023) ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில் இன்று (09.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் பல்கலைக்கழக வளாகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் "நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்" என்ற தலையங்கத்திலே உரையாற்ற இருந்தார்.
சுவாஸ்திகா மீளவும் அழைக்கப்பட வேண்டும்
இந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினரின் நெருக்குதலின் காரணமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு
சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகம்
ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப்
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan