கைதை எதிர்த்த கஜேந்திரன் வாகனத்தில் தூக்கி ஏற்றப்பட்டார்! வெளியான பரபரப்பு காணொளி(Video)
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணிலின் பங்கேற்புடன் இடம்பெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது நடவடிக்கையை எதிர்த்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிஸார் வாகனத்தில் தூக்கி ஏற்றி அழைத்துச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது.
இதன்போது செல்வராசா கஜேந்திரன், “பதவிக்கு ஆசைப்படும் ரணிலே வெளியேறு”,இனப்படுகொலையாளி ரணிலே வெளியேறு”,“இலங்கையின் சுதந்திரநாள் தமிழரின் கரிநாள்”, “இராணுவமே வெளியேறு” என பல்வேறு கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறு பல கோசங்களை எழுப்பியபடி போராட்டத்தை முன்னெடுத்த செல்வராசா கஜேந்திரனை இளைஞர்கள் உட்பட பலரின் எதிர்ப்பை மீறி பொலிஸார் கைது செய்து இழுத்துச் சென்றுள்ளனர்.