யாழில் தடுப்புகாவலிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி உட்பட பலரின் புகைப்படம் வெளியானது (Photos)
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இலங்கையின் 75 சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ்.நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல சட்டத்தரணி உட்பட 18 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் யாழ் சிறைச்சாலையில் தடுப்புகாவலிலுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இலங்கையின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதி இன்று (11.02.2023) நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இலங்கையின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் என பிரகடனப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முன்னணி யாழ்.நகரில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தது.
பொலிஸார் தடை உத்தரவு
இதனையடுத்து யாழ்.நகரில் சுதந்திர தினத்துக்கு எதிரான போராட்டங்கள், பேரணிகள் நடத்துவதை தடுப்பதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிஸார் தடை உத்தரவு பெற்றிருந்தனர்.
எனினும் தடை உத்தரவை மீறி இன்று மாலை தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்ப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடத்தப்பட்டிருந்தது.
இதனை அடுத்து சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டத்தை தடுக்க முயற்சிக்கப்பட்டது.
எனினும் போராட்டம் தொடர்ந்த நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல சட்டத்தரணிகனகரட்ணம் சுகாஸ் உள்ளிட்ட 18 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
