இலங்கை கடற்றொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்
இந்திய இழுவை படகுகளின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவரான சிறீகந்தவேல் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (01.03.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03) யாழ் மாவட்டம், காங்கேசன்துறை, தீவகம், வடமராட்சி வடக்கு மற்றும் வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளிலுள்ள கடற்றொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து அந்தந்த பகுதிகளில் போராட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சம்மேளனமும் யாழ் மாவட்ட கிராமிய அமைப்புக்களின் சம்மேளனமும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




