யாழில் பாதசாரி கடவைக்கு அருகில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு
யாழில் பாதசாரி கடவைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (01.3.2024) யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி அருமைநாயகம் (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் இன்று காலை வீட்டிற்கு அருகாமையில் உள்ள பகுதியில் குப்பையை கொட்டிவிட்டு வீட்டுக்கு வருவதற்காக வீதியை கடக்க முற்பட்ட போது, பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த வேளை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
