முல்லைத்தீவில் பொலிஸார் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற நபர்கள்
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்ணீரூற்று கணுக்கேணி சந்திக்கு அருகில் இரவு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது அடையாளம் தொரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளால் பொலிஸார் மீது மோதித் தள்ளியதில் பொலிஸார் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவமானது, கணுக்கேணி சந்தி பகுதியில் நேற்றிரவு (29.02.2024) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், கணுக்கேணி சந்தி பகுதியில் இரவு கடமையில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் ஒன்றினை மறித்து நிறுத்தியுள்ளனர்.
யாழ் போதனா மருத்துவமனை
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் பொலிஸார் மீது மோட்டாரினால் மோதிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், பொலிஸார் மீதுவிபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய இருவரையும் தேடும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 8 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
