நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற போராட்டங்கள்(Photos)
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு (தேசிய பாடசாலை) தமது தோட்டத்தில் உள்ள தரம் ஆறுக்கு மேல் கல்வி பயிலும் மாணவர்களையும் உள்வாங்குமாறு வலியுறுத்தி, கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக நேற்று (18.01.2023) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சுமார் 2500 மாணவர்கள் வரை கல்வி பயில்கின்ற போதிலும், தமது தோட்ட மாணவர்கள் உள்வாங்கப்படுவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
எமது தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள பாடசாலை கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் என்பதால் எமது மாணவர்களை உள்வாங்குமாறு கோருகின்றோம் எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
இப்போராட்டத்தையடுத்து பாடசாலையில் முத்தரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நுவரெலியா வலய கல்வி அதிகாரிகள், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை அதிபர், முகாமைத்துவ குழு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
எதிர்வரும் 31ம் திகதி, இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என சந்திப்பில் உறுதியளிக்கப்பட்டது என போராட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக அரசின் அதிகரித்த வரி சுமைகளுக்கு எதிராக நேற்று (18-01-2023) போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி-எரிமலை,யது
வடமாகாணம்
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் நியமனம் தொடர்பில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளராகக்
கடமையாற்றிய குணபாலச்செல்வம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் பணி ஓய்வு பெற்று
சென்ற நிலையில் அவருடைய இடத்துக்கு எவரும் நியமிக்கப்படவில்லை.
இதன் காரணமாக இன்று வடமாகாண அரச பேருந்து சாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள கோண்டாவில், பருத்தித்துறை, காரைநகர், ஆகிய சாலை முகாமையாளர்கள், மற்றும் சாரதிகள், ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். மத்திய பேருந்து நிலையமும் வெறிச் சொடிய நிலையில் காணப்பட்டுள்ளது.
இதனால் அரச, பாடாலை மாணவர்கள், பயணிகள் ஆகியோர் பெரும் அசொரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
செய்தி-கஜிந்தன்




பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
