கிளிநொச்சி கவனயீர்ப்பு போராட்டம் - பன்னாட்டு சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள விடயம்

Tamils Kilinochchi S Shritharan Eastern Province Northern Province of Sri Lanka
By Thevanthan Jul 27, 2025 09:14 AM GMT
Thevanthan

Thevanthan

in சமூகம்
Report

வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பன்னாட்டு சமூகத்தின் கவனத்திற்கு, தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டுமே எமக்கான நீதியை வேண்டுகின்றோம்.

ராசிக்கின் காலில் விழுந்த சாரா புலஸ்தினியின் தாயார் கவிதா! அதிரப்போகும் புலனாய்வாளர்களின் கைது

ராசிக்கின் காலில் விழுந்த சாரா புலஸ்தினியின் தாயார் கவிதா! அதிரப்போகும் புலனாய்வாளர்களின் கைது

கிளிநொச்சி கவனயீர்ப்பு போராட்டம் - பன்னாட்டு சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள விடயம் | Protest In Front Of Kandaswamy Temple Kilinochchi

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், நிலத்தை இழந்தவர்கள், வளச் சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் வலையமைப்புக்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் அமைப்புப் பிரதிநிதிகள் அடங்கலாக பல்வேறு வகையில் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட உள்ளாக்கப்பட்டு வருகின்ற பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கிழக்கிலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய 8 மாவட்டங்களிலும் 26 ஜுலை 2025 ஆகிய இன்றைய தினம் நாம் ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டம் ஊடாக எமது ஏகோபித்த கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

அரசிற்கு இங்கு "நாங்கள்" யாரென்றால்:

(1) வடக்கு கிழக்கின் இராணுவமயமாக்கப்பட்டுள்ள எந்திரத்தின் மிருகத்தனத்தின் கீழ் வாழ்ந்து வரும் தமிழர்கள் (அரசு கூட பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக அறிவித்தது),

(2) அரசு புரிந்த பன்னாட்டுக் குற்றங்களிலிருந்து தப்பிப் பிழைத்த உயிருள்ள சாட்சிகள்.

(3) வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பட்ட மக்களின் உறவினர்கள், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், சமூதாய மன்றங்களின் உறுப்பினர்கள், பெண்கள் வலையமைப்புக்களின் உறுப்பினர்கள் மற்றும் "நாங்கள்" என்பதில் முப்படைகள், அரச தொல்பொருள் துறை, வனவிலங்குகள், கடலோர பாதுகாப்பு, வனத்துறைகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களால் வலுக்கட்டாயமாக பிடிக்கப்பட்டுள்ள தங்களின் தாய்நிலத்திற்காகப் போராடும் மக்கள், தெற்கிலிருந்து வந்த மீனவர்களால் கடற்படை மற்றும் மீன்வளத் துறையின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ள தங்களின் மூதாதையர் மீன்பிடித்த தளங்களை மீட்டெடுக்கப் போராடும் தமிழர்கள் அடங்குவர்.

கிளிநொச்சி கவனயீர்ப்பு போராட்டம் - பன்னாட்டு சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள விடயம் | Protest In Front Of Kandaswamy Temple Kilinochchi

இறுதியாக "நாங்கள்" என்பது ஐ.நா. மீதும், சர்வதேச சமூகத்தின் மீதும் இன்றுவரை நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள்.

முன்னாள் அமைச்சர்கள் இருந்த சிறைச்சாலை தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட சாதனங்கள்

முன்னாள் அமைச்சர்கள் இருந்த சிறைச்சாலை தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட சாதனங்கள்

திணைக்களங்களான குறிப்பாக தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டு பாரம்பரியமாக தமக்கேயான தனித்துவமான ஆட்சிகளை அமைத்து ஆண்டு வந்த வரலாற்று அடையாளத்துடன் வாழ்ந்தவர்கள்.

இப்பிராந்தியத்தில் எண்ணிக்கைப் பெரும்பான்மையினரான தமிழ் மக்களுடன், எண்ணிக்கைச் சிறுபான்மையினரான தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

தொடர் இடப்பெயர்வு மற்றும் பல வருடகால அகதிமுகாம் வாழ்வை தமிழ் மக்களுக்கு வழங்கியது சிங்கள அரச பொறிமுறை முன்னெடுத்த போரானது தமிழர்களின் இருப்பிடங்களையும் சொத்துக்களையும் வாழ்வாதாரங்களையும் திட்டமிட்டகையில் முற்றாக அழித்து தமிழர்களை வக்கற்ற நிலைக்குள்ளாக்கியது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோர் கைது செய்ய பல்லாண்டுகள் விசாரணைகளின்றி உட்படுத்தப்பட்டனர். சிறையிடப்பட்டதுடன் சித்திரவதைகளுக்கும் பல்லாயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர் இராணுவமயமாக்கல் இடம்பெற்றதுடன் திட்டமிட்ட முறையிலான நில அபகரிப்புக்களும் சிங்கள் குடியேற்றங்களும் அதிகரிக்கப்பட்டன.

கிளிநொச்சி கவனயீர்ப்பு போராட்டம் - பன்னாட்டு சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள விடயம் | Protest In Front Of Kandaswamy Temple Kilinochchi

அரச பாதுகாப்புப் பொறிமுறையின் திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தலை இன்றுவரையில் மனித பாதிக்கப்பட்டவர்களும் எதிர்கொண்டு வருகின்றனர். உரிமை செயற்பாட்டாளர்களும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற சாதாரண மனித உரிமை அது மாத்திரமின்றி மீறல்கள் தொடர்பான விசாரணைகளில் கூட இலங்கையின் உள்ளகப் பொறிமுறைகள் நீதியை வழங்க மறுத்து வருகின்ற வேளையில் பன்னாட்டுக்குற்றங்களை நிகழ்த்திய அரசே அதற்கான நீதியையும் அதே உள்கைப் பொறிமுறையின் ஊடாகத் தர வேண்டுமெனக் கூறுவது எவ்வாறு சாத்தியமாகும் என்பதைப் பலமுறை நாம் பன்னாட்டுப் பிரதிநிதிகளுக்கும் அமைப்புக்களுக்கும் தெரிவித்திருந்தோம் என்பதனை தங்களுக்கு இந்த இடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.

செம்மணியில் பொலித்தீன் பை அடையாளம்! - எலும்புக் குவியல்கள் இருப்பதாகச் சந்தேகம்

செம்மணியில் பொலித்தீன் பை அடையாளம்! - எலும்புக் குவியல்கள் இருப்பதாகச் சந்தேகம்

உள்ளக நீதிப்பொறிமுறையென்பது என்றைக்கும் நியாமான திர்வினை இலங்கையின் ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்போவதில்லை என்பதனால் ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள்!

ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டுச் சுதந்திர நீதிப் பொறிமுறை ஊடாக மட்டுமே நீதியை வேண்டுகின்றோம். அதன் அடிப்படையில் பன்னாட்டு சமூகத்திடம் கீழ் குறிப்பிடப்படும் கோரிக்கைகளை வேண்டி நிற்கின்றோம்

1. சத்தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பள்னாட்டு நீதிப் பொறிமுறை ஊடான விசாரணைகள் உடன் மேற்கொள்ளப்படல்வண்டும்

2. ஈழத் தமிழ் மக்களுக்கு இடப்பெற்ற இனப்படுகொலைகளுக்கான நீதிப் பொறிமுறை நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படாமல் உடன் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கிளிநொச்சி கவனயீர்ப்பு போராட்டம் - பன்னாட்டு சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள விடயம் | Protest In Front Of Kandaswamy Temple Kilinochchi

3. தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்பு உட்பட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்கவும் குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தவும் ஒரு பாட்டு குற்றவியல் நீதித்துறை அமைப்பை உருவாக்க வேண்டும்.

4. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை சாவதேசம் கால இழுத்தடிப்பு செய்யாமல் உடன் சர்வதேச நீதிப் பொறிமுறையை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும்.

5. ஸ்ரீலங்காவில் தமிழ் இன அழிப்பு நடந்ததை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும்

6. செம்மணி, மன்னார் மற்றும் பிற பகுதிகளில் காணப்படும் பெரும்பாலான மனிதப் புதை குழிகள் தொடர்பாக பளனாட்டு தணிக்கை நிபுணர்களை விசாரணைக்காக அனுப்ப வேண்டும்

7. தமிழர் பாரம்பரியப் பண்பாட்டுச் சிள்ளங்களை அழிக்கும் நடவடிக்கைகளை மற்றும் நி ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவேண்டும், (இவை அரச அனுசரணையுடன் நடத்தப்படும் சிங்களமயமாக்கல் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.)

கிளிநொச்சி கவனயீர்ப்பு போராட்டம் - பன்னாட்டு சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள விடயம் | Protest In Front Of Kandaswamy Temple Kilinochchi

8. தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.

9. பயங்கர வாத தடை சட்டம் மற்றும் நிகழ் நிலை சட்டம் (PTA & Online Safety Act) இரத்து செய்ய ஸ்ரீலங்கா அரசிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கல்முனை, Montreal, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US