கொழும்பில் இடம்பெறவுள்ள பாரிய போராட்டம்
அரசாங்கத்தின் வரித் திருத்தத்திற்கு எதிராக 40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களின் பங்குபற்றுதலுடன் இன்று(22.01.2023) கொழும்பில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 40 துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் இன்று கொழும்பு கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, "இன்று அனைத்து துறைகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் கொழும்பில் ஒன்றுகூடுவார்கள்.
இது மற்றுமொரு சமிக்ஞையே. இந்த துறைகள் அனைத்தும் தங்கள் கடமைகளில் இருந்து விலகிக் கொண்டால், இந்த நாடு செயலிழந்துவிடும் என்ற உண்மையை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்."என கூறியுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
