கொழும்பில் நாளை முன்னெடுக்கப்பட உள்ள மாபெரும் போராட்டம்
வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தமாறு கோரி கொழும்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து நாளை(22) காலை 9 மணியளவில் நாடாளுமன்றச் சுற்று வட்டத்தில் குறித்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
குமணனை அச்சுறுத்துவதை நிறுத்து, வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
போராட்டம்
முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கடந்த 17ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சுமார் 7 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.

அத்துடன் மேலதிக விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போது, முன்னிலையாக வேண்டும் எனவும், விசாரணை விடயங்கள் தொடர்பில் வெளியில் கூறக் கூடாது எனவும் கடுமையாக அறிவுறுத்தியே குமணன் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |