காலிமுகத்திடலில் குவிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர்:தொடர்ந்தும் அமைதியின்மை(Live)
காலிமுகத்திடலில் தற்போது பொலிஸாருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
இருப்பினும் போராட்டக்காரர்கள் அமைதியாக முறையில் செயற்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காலிமுகத்திடலின் தற்போதைய நிலை குறித்து அவதானிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அங்கு வருகை தந்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
காலிமுகத்திடலில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
போராட்டங்களில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நிகழ்வின் ஆரம்பமாக பௌத்த மத வழிபாடுகளை போராட்டக்கார்கள் ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டக்கார்களை கீழே வீழ்த்தும் அளவிற்கு ஏராளமான பொலிஸார் அவர்களை தள்ளிக்கொண்டு வந்துள்ளனர்.
இதனால் காலிமுகத்திடலில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கடந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் நோக்கத்தில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது காலிமுகத்திடல் முன்னணி செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
இந்நிலையில் குறித்த நினைவு கூறல் நிகழ்வை தடுப்பதற்காக பொலிஸார் காலி முகத்திடல் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தற்போது காலிமுகத்திடலில் போராட்டக்காரர்களை விட அதிகமான பொலிஸார் காலிமுகத்திடல் பகுதி மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.












