மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: 500க்கும் மேற்பட்டோர் கொழும்பில் போராட்டம்
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
நமது நாடு, நமது மன்னார்
“நமது நாடு, நமது மன்னார், நமது போராட்டத்தின் கோரிக்கைகள்” என பதாகைகளை ஏந்தி மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும் என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் எந்தவொரு இடத்திலும் கனிம மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது, அமைக்கப்பட்ட ( தம்பபன்னி, நறுவிலிக்குளம் ) ஆகிய 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை உடன் நிவர்த்தி செய்தல் போன்ற கோரிக்கைகளை மக்கள் எழுப்பியுள்ளனர்.









