பயங்கரவாத தடைச்சட்டம் நீக்குவதாக வாக்குறுதி: அநுரவிற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
பயங்கர வாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கூறி, ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம், தற்போது சிங்கம் போன்ற கொடிய முகத்துடன், புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்காக வரைபை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட புதிய பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(30.01.2026) கொழும்பு - நீதி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சிவில் செயற்பட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், அருட்தந்தை மா.சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை மா.சக்திவேல், “ ஜெ. ஆர். ஜெயவர்த்தனவிற்கு இல்லாத கொடிய முகம் ஒன்று அநுரவிற்கு இருக்கிறது. இந்த சிங்கம் தெற்கில் உள்ள தமிழ் மக்களை வேட்டையாட காத்திருக்கிறது. இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தினால் தமிழர்கள் சூரையாடப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது” என வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் களத்தில் என்னென்ன விடயங்கள் முன்வைக்கப்பட்டன என்பதை காணொளியில் பார்க்கலாம்.
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan