PSTA சட்டமூலத்திற்கு எதிராக வடக்கு- கிழக்கில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம்
அநுர அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட PSTA சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி, இன்று (09) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பான மெசிடோ (MESIDO) அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கோரிக்கை
முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், அதனை முழுமையாக இரத்துச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கும் நோக்கிலும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமே PSTA என அழைக்கப்படுகிறது.

குறித்த சட்ட வரைவு தொடர்பாகச் சிவில் சமூக அமைப்புகள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பல்வேறு கரிசனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, பயங்கரவாதம் தொடர்பான வரையறைகள், கைது மற்றும் தடுப்புக்காவலுக்கான அதிகாரங்கள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு எதிராக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பல்வேறு கலந்துரையாடல்களும் எதிர்ப்புப் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - தீபன்
மட்டக்களப்பு
PSTA சட்டமூலத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09) திகதி மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
கவனயீர்ப்பு போராட்டம்
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் PSTA சட்டமூலத்திற்கு எதிராகவும், PTA வும் வேண்டாம் PSTA யும் வேண்டாம் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு மக்கள் கவனயீர்ப்பில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜன் எப்படி இருக்கிறார்..! வெளிவந்துள்ள புதிய தகவல்



ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan