சவூதி அரேபிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜன் எப்படி இருக்கிறார்..! வெளிவந்துள்ள புதிய தகவல்
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாட் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் குறித்து ஆராய்வதற்காக சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, அவர் அனோஜனைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்டு சவூதி அரேபிய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜன்
ரியாத்திலிருந்து சுமார் 450 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சிறைச்சாலையிலேயே அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை, சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ள இலங்கையின் விசேட சட்டக் குழுவினருக்கு தூதுவர் தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.
இதேவேளை அனோஜனை விடுவிப்பது மற்றும் அவருக்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இலங்கையின் விசேட சட்டக் குழுவினர் கடந்த 6ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பயணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.