இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி பாம்பன் பாலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்
இலங்கையில் கைது செய்யப்பட்ட 27 இந்திய கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன் தினம் (14.10.2023) மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை மூன்று விசைப் படகையும் அதிலிருந்து 12 கடற்றொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.

சாலை மறியல் போராட்டம்
இதேபோல் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது இரண்டு விசைப் படகையும் அதிலிருந்து 15 கடற்றொழிலாளர்களையும் கைது செய்து கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஐந்து விசை படகையும், 27 கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வேண்டும், அதேபோன்று இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம், ஜெகதாப் பட்டினத்தை சேர்ந்த 9 படகுகளை மத்திய அரசு மீட்டு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் (18.10.2023) ஆம் திகதி பாம்பன் சாலை பாலத்தின் நடுவில் கடற்றொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று (16.10.2023) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.



19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam