மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி போராட்டம்
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நீதிகோரி போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (24.06.2024) காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
கோரிக்கைகள் அடங்கிய மனு
இதன்போது, சர்வதேச சமூகத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலான கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் சங்க செயலாளரினால் வாசிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டதுடன் ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக தகவல் - குமார்







வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
