கொழும்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கிறங்கிய அரச ஊழியர்கள்
அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளின் தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு லொட்டஸ் வீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சுக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.
அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்ப கோரியே போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில் போராட்டக்களத்திற்கு பொலிஸார், இராணுவத்தினர், கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று 4 விதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக களத்தில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பள பிரச்சினை, நியமனங்கள் வழங்கப்படாமை, ஓய்வூதிய கொடுப்பனவுகள் சிறப்பு கொடுப்பனவுகள் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தரப்பினர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமது கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் செவிமடுக்க வேண்டும் என்பதை ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் அரச ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
