யாழ்.நெல்லியடியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிராக கண்டனப் போராட்டம் முன்னெடுப்பு!
யாழ்ப்பாணம் - நெல்லியடியில் புதிதாக மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (12.10.2026) யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மதுபோதைக்கு எதிரான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், மண்டான் கலைநேசன் சனசமூக நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்று, மண்டானில் அமைந்துள்ள மதுவரித் திணைக்களத்தின் முன்னால் ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
புதிதாக நான்கு மதுபானசாலைகள்
இதன்போது, நெல்லியடியில் மதுபானசாலை அமைப்பதற்கு எதிராகப் பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனு, மண்டானில் அமைந்துள்ள மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பு அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த மனு, மேலதிக நடவடிக்கைக்காக மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மதுபானசாலைகளின் அதிகரிப்பால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலை வெளியிட்ட போராட்ட ஏற்பாட்டாளர்கள், பொதுமக்களின் எதிர்ப்பையும் சமூக நலனையும் கருத்திற்கொண்டு, நெல்லியடியில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக நான்கு மதுபானசாலைகளை அமைப்பதற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri