வடக்கு கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க கோரி போராட்டம்
வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் இன்று முதல் சுகயீன விடுப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் நிர்வாக மற்றும் சேவை சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்க கோரி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் காரணமாக கால்நடை பண்ணையாளர்கள் தமக்கான சேவைகளைவ பெறமுடியாது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்களின் வலியுறுத்தல்
இதன்போது போராட்டத்தரப்பினர் வடக்கு மாகாண நிர்வாகமே கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமே எமது உரிமைகளையும், பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கச் செய்யாதே என கோரியுள்ளனர்.
மேலும் எமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எமது தொழிற்சங்கப் போராட்டம் ஓயாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

